2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோப்பாய்க்கு மாற்றப்பட்ட இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவு தலைமையகம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 16 வருடங்களாக யாழ்ப்பாணம், சுபாஷ் ஹோட்டல் கட்டிடத்தில் இயங்கி வந்த இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் நேற்று கோப்பாய் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டது.

குறித்த ஹோட்டல் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி படைப்பிரிவு கோப்பாய் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, 51ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக வல்கம ஆகியோர் இந்த படைப்பிரிவின் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தனர்.

தனியார் சொத்துக்களை இராணுவ பாவனைக்காக வைத்திருத்தல் தொடர்பான அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இக்கட்டிடம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இந்த ஹோட்டல் 1995ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி இராணுவத்தினரால் குத்தகைக்குப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X