2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 512 பேர் பலி

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களில் பரவிவரும் டெங்கு தொற்றுநோய் காரணமாக இந்த வருடத்தில் மாத்திரம் 512 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 20 ஆயிரத்து 647 பேர் டெங்கு தொற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 10 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களை நோக்குமிடத்து கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 123 ஆக உள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 427 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 395 பேரும், ரத்தினபுரியில் ஆயிரத்து 573 டெங்கு தொற்றுடையவர்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த மாதம் டெங்கு தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .