2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொரிய மொழிப் பரீட்சையில் 5302 பேர் சித்தி

Super User   / 2010 நவம்பர் 18 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றிய இலங்கையர்களில் 5,302 பேர் சித்தியடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 21.84 சதவீதமாகும். 29,583 பேர் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

தென்கொரியாவில் வேலை வாய்ப்புப் பெற விரும்புபவர்களுக்காக கடந்த 30, 31 ஆம் திகதிகளில் இப்பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் வெற்றியடைந்தவர்களை தொழில்வாய்ப்புக்கான நேர்காணல்களுக்கு அழைப்பு விடுக்க வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .