2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்ட இலங்கையர் 56பேரும் நாடு திரும்பினர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய மீனவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 56பேரும் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினர்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி குழுவில்,இரு பெண்கள் அடங்குவதோடு நான்கு சிங்களவர்களும் காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி, நீர்கொழும்பு மீனவத் துறைமுகத்திலிருந்து பயணித்த இவர்களது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பில் இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்ட இவர்கள், இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்திய உயர்ஸ்தானிகராலயமானது  அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், இன்று அவர்கள் நாடு திரும்பினர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களிடம் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளை அடுத்து அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .