S.Renuka / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதுடன், தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உட்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது.
இதனையடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக்யுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு 8 பில்லியன் டொலர் முதல் 10 பில்லியன் டொலர் வரை சேமிக்க முடியும். இந்த தொகையை ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று ஆரக்கிள் கருதுகிறது. ஆரக்கிள் நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது.
உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் சமீபத்தில் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கியது. ஏஐ பயன்பாடு, பொருளாதார தாக்கம் ஆகியவற்றால் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருவது ஐடி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago