S.Renuka / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டின் ஆலோசனையை நம்பி சிகிச்சை முறைகளைத் தேடியது பெரும் ஆபத்தாக மாறியது.
ஏஐ வழங்கிய தகவலின் அடிப்படையில், அவர் ஒரு மருந்தை எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கினார்.
இந்த மருந்துகள் எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுபவை. ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு இது சரியான சிகிச்சை அல்ல என்பதைக் கவனிக்காமல் அவர் தொடர்ந்து உட்கொண்டுள்ளார்.
முறையற்ற அளவில் இந்த மருந்துகளை பயன்படுத்தியதால், அரிய மற்றும் ஆபத்தான தோல் நோய் தாக்கியுள்ளது.
இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து, தற்போது டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள், “ஏஐ கருவிகள் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்க முடியும்.
மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவை நம்புவது உயிருக்கு ஆபத்தாக முடியும். உடனடியாக நிபுணர் மருத்துவரை அணுகுவது அவசியம்,” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
38 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago