2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

பெருமளவு போதைப்பொருளுடன் இருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 9 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 150,000 ரூபாய் பணம் ,போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தொலைபேசிகள்,காரொன்று மற்றும் முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள அங்காடி ஒன்றிற்கு முன்பாக உள்ள வீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் ஒருவரான கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும் அளவு போதைப்பொருள் கடத்தல்காரரான 'எல்லேகொட மத்துமகெ தினேஷ் தரங்க'  என்பவரின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிரதான உதவியாளர் என பொலிஸ் விசாரணையில், தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .