2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இரு ஆஸி. பிரஜைகள் உட்பட 6 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹக்மன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கார் ஒன்றும் வான் ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றவர்களே விபத்திற்கு உள்ளானார்கள். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் எல்லேவெல மற்றும் கங்கொடகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன பொலிஸார் இந்த விபத்து தொடர்பில்  விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--