2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சீரற்ற காலநிலையால் 6000பேர் பாதிப்பு; 9பேர் பலி்; 30பேரை காணவில்லை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 9பேர் பலியாகியுள்ள நிலையில் சுமார் 6ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலம் இந்த நிலைமை தொடரும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

இதேவேளை, தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்குச் சென்ற மீனவர்களில் 30பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி மீனவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் 5 படகுகள் நடுக்கடலில் உடைந்துள்ள நிலையிலேயே மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .