Super User / 2011 ஜனவரி 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஒரு வார கால விடுமுறைக்கு பின்னர் கிழக்கு மாகாண பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 63 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவில்லை என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தெரிவித்தார்.
இந்த 63 பாடசாலைகளில் 32 பாடசாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 31 பாடசாலைகள் அகதி முகாம்களாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி 63 பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.
வெள்ளத்தின் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தின் பாடசாலைகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நிசாம் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago