2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

லலித் கொத்தலாவலவின் வீட்டை முற்றுகையிட்ட 7 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் வீட்டை நேற்று வியாழக்கிழமை முற்றுகையிட்டு செலிங்கோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலுள்ளவர்களை  வெளியேறவிடாது மேற்படி நபர்களை தடுத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி கூறினார்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் போன்று இந்நபர்கள் லலித் கொத்தலாவலவின் வீட்டை இடைமறித்துக் கொண்டு தங்களது பணத்தை மீளத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

பம்பலப்பிட்டியிலுள்ள லலித் கொத்தலாவலவின் வீட்டின் இரு வெளிப்புறக் கதவுகளையும் மறித்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்கரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறிய பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி, இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--