2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஈரானிய பிரஜைக்கு 8 வருட சிறை

Kogilavani   / 2012 நவம்பர் 08 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ரி.பாருக் தாஜுதீன்)

'மேதம்பெற்றமைன்' எனும் பயங்கரமான போதைவஸ்தை நாட்டுக்குள் கொண்டுவந்து வியாபாரம் செய்தமைக்காக  ஈரானிய பிரஜை ஒருவருக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் எட்டு வருட சிறைத்தண்டனை  இன்று விதித்துள்ளது.

மோஷென் டெரமவுவொன் என்னும் இந்த ஈரானிய பிரஜை உதவி சுங்க அத்தியட்சகர் பி.வி.ஏ. பெர்ணான்டோவினால் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். இவர் மீது போதைபொருளை கடத்தி வந்தமை, வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை என்னும் மூன்று குற்றச்சாட்டுக்களை போதைபொருள் பணியகம் மேல் நீதிமன்றில் சுமத்தியிருந்தது.

இவர் மீதான வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லலித் ஜயசூரிய ஈரானிய பிரஜையை குற்றவாளியாக இனங்கண்டு அவருக்கு எட்டு வருட சிறைத்தண்டனை  விதித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .