2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

8 இந்தியர்களுடன் ஈரானிய கப்பல் இலங்கையில் தடுப்பு

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய வங்கியிலிருந்து 250 மில்லியன் யூரோ கடன் பெற்று வாங்கப்பட்ட ஈரானிய கப்பல் கம்பனி ஒன்றின் கப்பலை இலங்கை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

இந்த கப்பலில் 16 ஈரானிய ஊழியர்களும் 8 இந்திய ஊழியர்களும் உள்ளனர். கடன் வழங்கிய ஜேர்மனிய வங்கி கேட்டதற்கு இணங்கவே இந்த கப்பல் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.  எம்.வி சியர் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த கப்பல் வங்கிக்குரிய கடன் பணத்தை கட்டவில்லை.

அத்துடன் இதன் பெயரும் எம்.வி அமினா என முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு வந்து காலி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டு நின்றபோது, டிசம்பர் 14ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் கப்பலினதும் ஊழியர்களினதும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில் இந்திய கப்பல் ஊழியரான போசுன் யேசுராஜ், இருதய நோயால் வருந்திக்கொண்டுள்ளார். இவரை சிகிச்சைக்காக வெளியே அனுப்ப விரும்பாத கப்பல் கப்டன் அவருக்கு கப்பலிலேயே சிகிச்சை அளித்து வருகின்றார்.

இந்த கப்பலிலுள்ள இந்திய ஊழியர்கள் தமது ஒப்பந்தகாலம் முடிவடைந்து விட்டது எனவும் தொடர்ந்து இந்த கப்பலில் வேலை செய்ய விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர். கப்பலில் இவர்கள் பலத்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவர்கள் படும் துன்பங்கள் பற்றி ஆனந்த் என்பவர் ஒரு குறுஞ் செய்தியை அனுப்பியதால் இந்திய கப்பல் துறை அமைச்சர்  ஜி.கே.வாஸனும் ஏனைய பல இந்திய அதிகாரிகளும் அது பற்றி அறிந்துகொண்டனர். இவர்கள் இந்திய கப்பல் ஊழியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என அவர்களது உறவினர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .