2021 மார்ச் 08, திங்கட்கிழமை

80,000 ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரொமேஷ் மதுசங்க)

யுத்தம் காரணமாக இரண்டு தசாப்த காலமாக கைவிடப்பட்டிருந்த  80,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் வடமாகாண விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

உரிய காலத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் சிறந்த அறுவடை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதைநெல், டிரக்டர் வண்டிகள், உரம் மற்றும் எனைய பொருள்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.

அத்துடன், பெரும்பாலான பகுதி விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சி விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .