2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

மனதை கவரும் Leisure World

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை ஓர் உல்லாசபுரி என்பதை அனைவரும் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பார்கள். அந்த உல்லாபுரியின் மற்றுமொரு அங்கம்தான் (Leisure World) 'லெஸர் வேர்ல்ட்'.

கொழும்பிலிருந்து அவிஸாவளைக்கு செல்லும் வழியில் 'சீதவாக்க' என்னும் இடத்தில் இந்த அழகிய 'லெஸர் வேர்ல்ட்' அமைந்துள்ளது. பாரிய பொருட்செலவில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாவது 'உல்லாசபுரி' இது என்பது சிறப்பம்சமாகும்.

பாரிய நிலப்பரப்பில் நீர் விளையாட்டுக்கள் மற்றும் ராட்டினங்களில் விளையாடும் அனுபவத்தை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு வழங்குகிறது 'லெஸர் வேர்ல்ட்'. வசதிபடைத்தவர்கள் மட்டும்தான் இங்கு சென்று வரலாம் என்ற நடைமுறை கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப 'பக்கேஜ்'களை தெரிவு செய்துகொள்ளலாம். சிறியவர்களுக்கு குறைந்தளவான கட்டணங்களும் பெரியவர்களுக்கு கூடியளவான கட்டணங்களும் அறவிடப்படுகின்றன. விசேட தினங்களில் குறைந்த கட்டணத்தில் நிறைவான விளையாட்டுகளை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கிவருகிறார்கள் 'லெஸர் வேர்ல்ட்' நிர்வாகத்தினர்.

மிகவும் பயிற்றப்பட்ட வழிகாட்டிகளின் உதவியுடன் உங்கள் மனம் விரும்பியபடி பொழுதினை களிக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன. ஆகையினால் சிறுவர்கள் பற்றி பெரியவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சுமார் 8 ராட்டின விளையாட்டுக்களையும் ஏராளமான நீர் சறுக்கல் விளையாட்டுகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

நீங்களும் உங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கடத்துவதற்காக ஒருமுறை 'லெஸர் வேர்ல்ட்' சென்று வாருங்களேன்..!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--