Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) புத்தளம் மதுரங்குளி நகரிலுள்ள முன்மாதிரி பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை (19) மதுரங்குளி பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதற்கமைய, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, விளையாட்டுத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டதுடன், மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன், மதுரங்குளி கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
47 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025