2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’அமெ. பிரஜாவுரிமையை 2 மாதங்களில் இரத்துசெய்ய முடியும்’

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார்.

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த, பொலிஸ் நிதிப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற கோட்டாபய, சுமார் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய அவரிடம், அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

இதே​வேளை, அஸ்கிரி மகா சங்கத்தின் பிரதித் தலைவர் வெண்டேருவே உபாலி தேரர், அநாவசியமாகக் கருத்துகளை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு, தனக்கு தனிப்பட்ட ரீதியில் ஆலோ​சனை வழங்கினார் என்றும், கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .