Editorial / 2020 மார்ச் 31 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
றம்ஸி குத்தூஸ்
இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இஜ்திமாகளில் பங்குபற்றி, நாடு திரும்பியிருக்கும் முஸ்லிம்களில் சிலர் இன்னமும் மறைந்திருக்கலாம், அவர்களை அல்லாஹ்வுக்காக வெளியே வந்து, அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கும் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்குமாறும், ஜம்மியதுல் உலமா சபையின் உபசெயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் மூலமாகக் கொரோனா வைரஸ் பரப்பப்படுவதாக வெளிவரும் வதந்திகள் தொடர்பில், தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, மௌலவி தாஸிம், இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இஜ்திமாகளில் இலங்கை சார்பிலும் பலர் கலந்துகொண்டு, நாடு திரும்பியிருக்கிறார்கள். இப்படித் திரும்பியவர்களில் பலர், தம்மை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கின்ற போதிலும், ஒரு சிலர் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து வாழ்கின்றனர்” என்றார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜம்மியதுல் உலமா சபையின் பத்வா குழு செயலாளர் மௌலவி இல்யாஸ், “வெளிநாடுகளில் இடம்பெற்ற இஜ்திமாகளில் கலந்துகொண்டு நாடு திரும்பியவர்களில்
அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பிலேயே இருக்கின்றனர். இவர்களில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவருக்கு
இருமல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்து, சிகிச்சை வழங்கப்படுகிறது” என்றார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago