2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று ஆஜர்

J.A. George   / 2021 ஜனவரி 19 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(19)  கூடவுள்ளது.

இன்றைய தினம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆணைக்குழுவின் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஷானி அபேசேகரவால் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாமல் போயிருந்தது.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .