2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஆவாக் குழுவைச் சேர்ந்த நால்வர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில், இருவேறு இடங்களில் வைத்து, ஆவாக் குழுவைச் சேர்ந்த பிரபல உறுப்பினர்களெனக் கூறப்படும் நால்வரை, கோப்பாய் பொலிஸார் இரண்டு நாட்களில் கைதுசெய்துள்ளனர்.

யாழ். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்தே, கோப்பாய், உரும்பிராய் பிரதேசத்தில் வைத்து, மோகனதாஸ் தினோஷன் மற்றும் லக்கேஸ்வரன் சமித்மன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவ்விருவரிடமிருந்தும் வாள்கள் இரண்டும் ​கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, மற்றொரு இடமான கோப்பாய், நீர்​வேலி மேற்கு பிரதேசத்தில், கணபதி சுபாஸ்கரன் மற்றும் கந்தவேல் நிக்ஷன் ஆகிய இருவரும், வாள்களுடன் கைதுசெய்யப்பட்டரென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அவ்விருவரும், ஆவாக் குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களென, விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆவாக் குழுவைச் சேர்ந்த இந்த நால்வரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற தாக்குதல்கள், கொள்ளை உள்ளிட்ட பல்வேறான சம்பவங்களுடன் ​​தொடர்புடையவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X