2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கு மஞ்சள் மீள் ஏற்றுமதி

R.Maheshwary   / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 62 மஞ்சள் அடங்கிய கொள்கலன்கள், இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து அபராதத் தொகையை அறவிட்டு, அதனை இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 1 மில்லியன் கிரோகிராம் மஞ்சள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்;டு, அரசுடமையாக்கப்பட்டுள்ள 30 தொன் மஞ்சளில் 10 தொன், ஆயர்வேத உற்பத்தி கூட்டுதாபனத்தின் கோரிக்கைக்கமைய, நிதி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .