Editorial / 2018 பெப்ரவரி 13 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும்.
இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago