2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இம்ரானுக்கு வழிவிட்டார் இந்தியப் பிரதமர் மோடி

Editorial   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

பாகிஸ்தான் பிரதமர் வருகைதரும் விமானம் இந்திய வான்வெளியை கடந்துச் செல்வதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. அதற்கான அனுமதியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு சென்றபோது, தன்னுடைய வான்வெளியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .