2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

‘இருபதுக்கு 20 எடுப்போம்’

Nirosh   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருபது பேரின் ஆதரவுடன், நிறைவேற்றிக்காட்டுவோம் என, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சவால்விடுத்தார்.

“20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்” என்றார்.

“இருபதுக்காக, 20 பேரை ஆளும் தரப்பினர் பக்கத்துக்கு இழுத்தெடுப்பதற்கு தாங்கள் தயாரெனத் தெரிவித்த அவர், பேச்சுக்கள் இன்னும் நிறைவடையவில்லை” என்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இறந்து பிறந்தாரா? என, நாடாளுமன்றத்தில் நேற்று (22) கேட்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்ஹ, நல்லாட்சி அரசாங்கத்தின் ​போது, நிலையியற் கட்டளைகளைக் கைவிட்டு, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்துக்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டமையை நாங்கள் மறந்துவிடவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X