2026 மார்ச் 04, புதன்கிழமை

‘இருவரையும் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே பார்க்கலாம்’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரையும், வாரத்தில் ஒருநாள் மட்டுமே, பார்வையிடுவதற்கு, விருந்தினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  

தங்களுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து, அவ்விருவரும் மேன்முறையீடு செய்துள்ளமையால், இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள தகவல் தெரிவித்துள்ளது.   

அவ்விருவரையும் பார்வையிடுவதற்கு, மாதத்துக்கு ஒருதடவை, வாரத்துக்கு ஒருநாள் (ஞாயிறு தவிர) பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதுவும், குடும்ப உறவர்கள் மற்றும் நண்பர்கள், ஒருசந்தர்ப்பத்தில் மூவர் மட்டுமே பார்வையிடமுடியும்.   

சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம், அவ்விருவரையும் ​வேறெவரும் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது. தங்களுக்கு எதிரான தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு முன்பாக, (நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர) ஏனை​யோரை மாதத்துக்கு ஒருமுறைதான் பார்வையிடமுடியும்.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும், நீரிழிவு நோய் காரணமாக, சிறைச்சாலையின் ‘கே’ விடுதியிலிருந்து, சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு கடந்த 8ஆம் திகதியன்று மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .