Niroshini / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இன்று, யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமென்றார்.
வடக்கு மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத் தடுக்க தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்கவேண்டும் என்றும், அவர் கூறினார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும், எதிர்காலத்தில் அவற்றை மீள துறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
"நுண்கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது. அத்தோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.
"எனினும், அந்த தொழில் முயற்சியானது அந்த தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
"அத்தோடு வியாபார வலையமைப்பும் இந்த நுண் கடன் பிரச்சினைக்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது. எனினும், இந்த குறித்த நுண்கடன் தொடர்பான பிரச்சினை தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்" எனவும், அவர் தெரிவித்தார்.
42 minute ago
58 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago
3 hours ago
5 hours ago