2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை வருகிறார் அஜித் தோவால்

Gavitha   / 2020 நவம்பர் 26 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், நாளை (27), இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மாலைத்தீவு தரப்பில் இருந்து, மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹமட் தீதியும் இலங்கை சார்பில் உயர்மட்டப் பிரதிநிதிகளாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின், இந்த வருடத்தில் இலங்கைக்கான இரண்டாவது விஜயம் இதுவாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியின் பின்னர், கடந்த ஜனவரி மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, “கடன் பொறி”ஐ எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .