2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்’

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை 2020இல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் ஏற்கெனவே எதிர்வுகூறியிருந்த மீட்சி நிலைக்கு மாறாக, நாட்டின் மோசமான கடன்நிலை காரணமாக, பெருமளவு பொருளாதார சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும், S&P குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மோசமான கடன் நிலைமையை கவனத்திற்கொண்டு, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தரப்படுத்தலிலிருந்து மேலும் ஒரு நிலை குறைத்து B-ஆக தரப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே B தரப்படுத்தலை இலங்கை உறுதியான புறத்தோற்றத்துடன் கொண்டிருந்ததாக S&P தெரிவித்ததுடன், முதலீட்டு தரப்படுத்தலிலிருந்து ஆறு மட்டங்கள் குறைந்ததாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள உறுதியற்றநிலை, அதனுடன் தொடர்புடைய பொருளாதார பின்னடைவுகள் போன்றவற்றின் காரணமாக, இலங்கையின் வெளிநாட்டு கடன் தீர்ப்பு மேற்கொள்ளப்படாமலிருப்பதற்கான இடர் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வழங்கியிருந்த கடன் தரப்படுத்தல் குறைப்பை தொடர்ந்து, S&P அமைப்பும் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் காணப்படும் நிலைபேறாண்மை சவாலை உறுதி செய்துள்ளது.

2020இல் இலங்கையின் கடன்தொகை மதிப்பு, மொத்த தேசிய உற்பத்தியின் 8சதவீமாக உயர்வடையும் எனவும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் வரிச் சேகரிப்பு பாதிப்படைந்து, அரசாங்கத்தின் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின்   10சதவீதத்தைவிட குறைவடையும் எனவும் S&P மதிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X