Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில், நேற்று (19), தென்னை மரத்தில் ஏறி, இளநீர் குலையைப் பறிக்கமுற்பட்ட 19 வயது இளைஞன் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன், ஏறாவூர் – மக்காமடி, ஆதம்லெப்பை குறுக்கு வீதியைச் சேர்ந்த தாவூத் சலீம் முஹம்மது றிபான் (வயது 19) என்பவராவார்.
இளநீர் விற்பனைச் செய்யும் இவ்விளைஞன், வழமைபோன்று, குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்புக்களிலுள்ள தென்னை மரங்களில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டிருக்கும்போதே, இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
1 minute ago
11 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
11 minute ago
19 minute ago
25 minute ago