2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

Editorial   / 2020 ஜூலை 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் ரயில் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, தனியார் பஸ் சங்கங்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமெனில், அதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் நாள்களில் பொது போக்குவரத்து சேவையை மக்கள் பயன்படுத்துவது குறைவடையலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--