2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

உடபுஸ்ஸலாவையில் கொரோனாவுக்கு ஒருவர் மரணம்

Editorial   / 2021 ஜனவரி 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான இளைஞன் உடபுஸ்ஸலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவர், அங்கு ஜனவரி 15ஆம் திகதியன்று உயிரிழந்தார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு 10.50க்கு அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு மேலும் எட்டுப்பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆகும்.

உடபுஸ்ஸலாவைச் சேர்ந்த அந்த இளைஞன், ​கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நிலைமையே மரணத்துக்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .