2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உணவு விநியோகத்தில் குறைப்பாடு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் கோரிக்கைகமைய, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதாகவும், இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு விநியோகிக்கும் போது, சில ஹோட்டல்களில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ​​தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி, இன்று (27) கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சுற்றலாத் துறை வீழ்ச்சியடைந்து, அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்  மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் நிபந்தனைகளை மீறாமல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான வசதிகளை ஹோட்டல் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--