Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக, பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களாகப் பெய்த அதிகப்படியான மழை காரணமாக நிலம் ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தறை மாவட்டத்தின் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, பதுளை, வெலிமடை, லுணுகலை ஆகிய பகுதிகளுக்கும், கண்டி மாவட்டத்தின் தொழுவ, மாத்தறை மாவட்டத்தின் அம்பன்கொல மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அதுரட்ட, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை (Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், மலைச்சரிவுகள் மற்றும் சரிவான பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வடைதல் போன்ற நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆறுகள், ஓடைகள் மற்றும் மலைச்சரிவுகளுக்குக் கீழ் வசிப்போர் மண் சரிவு மற்றும் திடீர் வெள்ளம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
18 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago