Freelancer / 2026 ஜனவரி 08 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந் 47 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 5 பேரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. இதில், மதுசாரம் நஞ்சானதாலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இரு பெண்களுக்கும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
17 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago