Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட உதயங்க வீரதுங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (17) காலை அழைத்துசெல்லப்பட்டிருந்தார்.
இதன்போது, இடம்பெற்ற வழக்கு விசாரணைகளையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு அமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த 14ம் திகதி குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அதனையடுத்து, புதிய மெகசின் சிறைச்சாலையில் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகயீனமடைந்திருந்தார்.
அதனையடுத்து, மெகசின் சிறைச்சாலையில் தேவையான மருத்துவ வசதிகள் இன்மையால் உதயங்க வீரதுங்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago