2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2017 மே 30 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 193ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், காயமடைந்தோர் எண்ணிக்கை 112ஆகவும் காணாமற்போனோர் தொகை 99ஆகவும் அதிகரித்துள்ளதென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
 
இதேவேளை, வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால், 149,678 குடும்பங்களைச் சேர்ந்த 575,816பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 19,068 குடும்பங்களைச் சேர்ந்த 76,754பேர், 383 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், நிலையம் தெரிவித்தது.

அனர்த்தங்களால், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 79பேரும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 59பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 24 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 13பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .