Editorial / 2017 ஜூலை 20 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு (இலங்கை மக்கள் முன்னணி) புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக, தொகுவாரியாக கருத்தரங்குகள் பல நடத்தப்படவுள்ளன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில், இக்கருத்தரங்குகள் எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் நடத்துவதற்கு அந்த முன்னணி தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கிளைக்குழுக்கள் மற்றும் தொகுதி குழுக்களை நியமிப்பதற்குமான யோசனைக்கு முன்னணியின் கூட்டத்தின் போது அங்கிகாரமளிக்கப்பட்டுள்ளது என்றும், 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்தக் கருத்தரங்குகளை ஓகஸ்ட் 14ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவருவதற்கும், அந்த முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.
கருத்தரங்குகளை வாரநாட்களில் மட்டுமே நடத்துவதற்கு தீர்மானித்துள்ள முன்னணி, தற்போது நிறுவப்பட்டுள்ள கிளைகள், இளைஞர், பெண்கள் அமைப்புகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் என்றடிப்படையில், கருத்தரங்குகளில் பங்கேற்பர் என்றும் அந்த முன்னணி அறிவித்துள்ளது.
இந்த முன்னணியின் இளைஞர் மற்றும் பெண்களுக்கான மாநாடு, பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ ஒருங்கிணைத்தல் அலுவலகத்தில், கடந்த வாரம் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
30 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago