Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாநிதி வி.ஜனகனின் எண்ணக்கருவில், உள்நாட்டு கலைஞர்களை, ஊக்குவிக்கும் முகமாக இன்று (27) அவர்களுக்கான ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன.
எமது நாட்டில் இருக்கின்ற நாடகம், சினிமா, பாடல் ஆகிய துறைகளில், பிரகாசித்துவரும் பழைய மற்றும் புதிய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவே, இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, நம் நாட்டு கலைஞர்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார, தொழிநுட்ப ரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கலாநிதி வி.ஜனகனின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற இந்நிகழ்வில், 15 கலைஞர்களுக்கு இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
கலாநிதி வி.ஜனகன் ஏற்கெனவே "சுத்தமான கொழும்பு" எனும் திட்டத்தின் மூலம் கொழும்பின் பல பகுதிகளையும் அபிவிருத்தி செய்து வருவதுடன், "இளைஞர்களை வலுவூட்டும்" திட்டம் மூலம் இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளையும்
ஏற்பாடு செய்து தொடர்ந்து நடத்தி வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025