Editorial / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கு, தனது ஆட்சிக் காலத்தின் போது, எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
எந்தவொரு நியாயமான விமர்சனத்துக்கும் தான் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தாது, நாட்டுக்கான பொறுப்பை, ஊடகங்கள் சரிவரச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று, நேற்று (12) முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலுமுரைத்துள்ள அவர், அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் செயற்றிறனை மேம்படுத்துதல், ஊழல் மோசடிகளைத் துடைத்தெறிதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகளுடனேயே, இந்நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர் என்றார்.
முதலீடுகள் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைச் சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கு, நாட்டின் பிரதிவிம்பம் மிகவும் முக்கியமானது என்றும் இந்தப் பிரதிவிம்பத்தைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு, இந்நாட்டு ஊடகங்களுக்கே உண்டென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.
சுவிட்ஸர்லாந்துத் தூதரக அதிகாரி விடயத்தில், சர்வதேச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்துத் தான் கவலையடைவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான திறன், இந்நாட்டு ஊடகங்களுக்கே உண்டென்றும் கூறினார்.
15 minute ago
34 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
43 minute ago
48 minute ago