Editorial / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில், தன்னுடன் எவரும் இதுவரை பேசவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டிய தேவை, தமது கட்சிக்கு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளதாகவும் நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளனரெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க, முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக, சர்வதேசத்தின் முன்னிலையில் மஹிந்த ஏற்கெனவே உறுதியளித்துள்ளாரெனவும் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எந்தக் கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகின்றனரென இதுவரை தீர்மானிக்கவில்லையெனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், எது எவ்வாறாயினும், தமது கட்சியின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் தமது கட்சியின் கொள்கைகளுடன் இணங்கிச் செயற்பட விரும்பும் எந்தக் கட்சியுடனும் இணைந்துச் செயலாற்றத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago