Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவ்பொத்தானை, கப்புகொல்லேவ பகுதியில் அமைந்துள்ள பதவி காப்பபுக் காட்டில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட , ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், கனரக இயந்திரம் மற்றும் இரண்டு லொறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்புகொல்லேவ, துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவொன்று சட்டவிரோதமாக மண் அகழ்ந்து விற்பனை செய்து வருவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago