2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’

Kogilavani   / 2020 நவம்பர் 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் காட்டுச் சட்டமும் காட்டு நீதிமன்றங்களுமே இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

“ஒருசில பிரமுகர்களின் வழக்குகளே, இன்று நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதாரண மக்களின் வழக்குகள், இன்று நீதிமன்றில் விசாரிக்கப்படுவதில்லை.

“தலதா மாளிகைக்கு குண்டு வைத்த, அரந்தலாவையில் பிக்குகளைப் படுகொலை செய்த பிள்ளையானுக்காக, இன்று பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் குரல் கொடுக்கிறார்கள்” எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .