2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

'ஏன் A/L படிக்கவில்லை?' விமலிடம் ராஜித்த கேள்வி

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

நாடாளுமன்றில் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த மோதல் சூடுபிடித்துள்ளது.

ராஜித்த: ​(அலைபேசியை பார்த்துக்கொண்டு) இவர்கள் இன்று காலை, தேசிய அரசாங்கமொன்று இல்லையென, பெரிதாகப் பேசினர். இதோ, தான் புதிய பிரதமரொருவரை நியமிக்குமாறு கோரவில்லையென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விமல்: ஏதாவதொரு ஆவணத்தைப் பற்றித் தெரிவிப்பதாயின், அதை சபையில் சமர்ப்பியுங்கள். அப்பா, பிள்ளை இருவருமே ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.

ராஜித்த: இவருக்கு தொழில்நுட்பம் பற்றித் தெரியாது. இவர் O/L ஃபெயில். முடிந்தால், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை சான்றிதழைக் காண்பியுங்கள் பார்ப்போம்?

விமல்: இந்த அமைச்சரவையின் பேச்சாளர் சொல்கிறார், நான் O/L ஃபெயில் என்று. முடிந்தாவ் நிரூபியுங்கள் பார்க்கலாம். நான் நாளைக்கே பதவி விலகுவேன்.

ராஜித்த: அப்படியானால், நீங்கள் ஏன் A/L செய்யவில்லை?

என, அமைச்சர் ராஜித்த கேள்வி எழுப்பியதும், நாடாளுமன்றத்தில் பாரிய ஆரவாரம் ஏற்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள், மேசைகளில் தட்டினர்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜித்த, “இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கலையாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், ஒ​ருபோதும் அரசாங்கத்தை விட்டுச் செல்லமாட்டார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X