Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.கமல்
ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே, நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாட்டின் பிற இனத்தவர்களைப் பாதுகாக்கவும், தமது கட்சியாலேயே முடியுமென்றார்.
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைகளைத் திறப்பதற்காக, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை, ஐ.தே.க எதிர்க்காது என்றும் சஹ்ரான் குழுவினரால் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பாடசாலைகள் விரைவில் திறக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக, 680 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதெனக் கல்வி அமைச்சர் கூறியிருந்த போதிலும், இதுவரையில் 191 ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதென அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் எனவும், அகிலவிராஜ் சாடினார்.
இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் மீது, சுகாதாரப் பாதுகாப்புச் செலவீனங்களைச் சுமத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட அவர், பொறுப்பை முழுமையாகவே அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டினார்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago