Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிபடாது. நாட்டுக்குள் எவ்வித பிளவும் ஏற்படாமல் ஒரு புதிய அரசியல் சானம் உருவாக்கப்பட வேண்டும்” என்று, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜூலி பிஷப்பை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து நேற்று (20) சந்தித்தனர்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனும் அவருடைய அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின்போது, விசேடமாக, அரசமைப்பு விடயம் சம்பந்தமாக பேசப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிபடாது.
நாட்டுக்குள் எவ்வித பிளவும் ஏற்படாமல் ஒரு புதிய அரசியல் சானம் உருவாக்கப்பட்டு, அந்த அரசியல் சாசனம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் சமத்துவத்தின் அடிப்படையில், ஒரு நிரந்தரமான சமதானம் ஏற்பட வேண்டும்.
அவ்விதமான சமாதானம் ஏற்பட்டால் மாத்திரமே, இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன், இந்நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைவதுடன், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முடியும்.
இது விடயம் தொடர்பாக, அவர்களுடன் தெளிவாகப் பேசினோம். இதுவரையில், எல்லா மக்களுடைய சம்மதத்துடனும் இந்நாட்டில் அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. அவ்விதமான ஒரு நிலைமைதான் இந்நாட்டில் நிலவிய மோதல்களுக்கு காரணமாக அமைந்தது.
ஆகையால், அதை நிரந்திரமாக நீக்கப்பட வேண்டுமாக இருந்தால், அனைத்து மக்களுடைய சம்மதத்துடனும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
எமது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே நடக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்” என்றார்.
“அத்துடன், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், காணி, காணாமல்போனோர், கைதிகள், மீன்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பேசினோம்.
தங்களுடைய அக்கறை தொடரும் என்றும் இவ்விடயம் சம்பந்தமாக தங்களால் இயன்ற பணிகளை
ஆற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026