2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கடைசி சந்திர கிரகணம் இன்று பி.ப 03.13 மணிக்கு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 30 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டின் கடைசி  சந்திர கிரகணம் இன்று திங்கள் கிழமை இலங்கை நேரப்படி மதியம் 12.59 மணி முதல் மாலை 05.25 வரை நிகழும். சந்திர கிரகணத்தின் உச்சம் மதியம் 03.13 மணிக்கு  நிகழவுள்ளது.கடந்த ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய திகதிகளுக்குப் பிறகு இன்று (நவம்பர் 30ஆம் திகதி) நிகழவுள்ள சந்திர கிரகணம் 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசியுமாகும். சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும்.

இன்று நிகழப்போகும் கிரகணம், முழுமையான சந்திர கிரகணம் அல்ல. அதாவது நிலவு பூமியால் முற்றிலும் மறைக்கப்படாது.

ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நிலவு ஒளி மங்கித் தெரிவதைத் திங்களன்று நிகழும் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .