Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது. எமது வாழ்க்கையில் அதனை காணமுடியாது. அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ போன்றவர்கள் 80 வயதை கடந்த பின்னரே அவ்வாறானதொரு ஆட்சியை காண கூடிய நிலை ஏற்படும். எனவே, இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago