2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கடவத்தையில் 6 கொரோனோ தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடவத்தை பிரதேசத்தில் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கடவத்தை- ரன்முத்துகல, பங்களாவத்த பிரதேசத்துக்கு பயணக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியிலிருந்து இந்தப் பிரதேசத்துக்கு பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதென, கடவத்த- மஹர பொதுசுகாதார பரிசோதகர் பிரதீப் வேரகல தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 200 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுள் மீன் வியாபாரி, அவரது மனைவி மற்றும் மகன் என ஒரே குழும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ​தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .