2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’கண்காணிக்க நிறுவனம் வரும்’

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடக வலையமைப்புகளின் பாவனைகளைக் கண்காணிப்பதற்காக, நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து, அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது என, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நேற்று (13) தெரிவித்தார்.

சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் எதிராக, வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலான கருத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

"பேஸ்புக் போன்ற சமூக ஊடக வலையமைப்புகளை, அரசாங்கம் தடை செய்யாது. ஆனால், கடுமையான கண்காணிப்புக் காணப்படும்" என அவர் தெரிவித்தார்.

பாலியல் திரைப்படங்களையும் சிறுவர் பாலியல் திரைப்படங்களையும் பகிர்பவர்களையும், இந்நிறுவனம் கண்காணிக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியின் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்பதாகவே, பேஸ்புக்கில் காணப்பட்ட சில பக்கங்களை நீக்குவதற்கு, அரசாங்கம் முயன்றது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அதற்கான மனித வளங்கள் பேஸ்புக்கிடம் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார். பேஸ்புக்கில், சிங்களத்தில் உரையாடக் கூடிய ஒருவர் இருந்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார். பூகோள ரீதியில், சிங்களம் பேசுவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்குப் பங்களித்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக வலையமைப்புகளை அணுகுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திய அமைச்சர், பங்களாதேஷ், வியட்நாம், ஜேர்மனி, ஹங்கேரி, இஸ்ரேல், ஈரான், சிரியா போன்ற நாடுகள், காலத்துக்குக் காலம், பேஸ்புக்கை முடக்குகின்றன எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .