2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கருணாவின் கருத்துக்கு மொட்டு கண்டனம்

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்தினை கடுமையாக கண்டிப்பதாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  இதனைக் கூறியுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் இம்முறை தமது அணியில் போட்டியிடவில்லை என்றும் அவர் வேறு ஒரு கட்சியில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சியின் வேட்பாளர் அல்லாத ஒருவரின் கருத்துக்கு தமது கட்சி பொறுப்பேற்க முடியாது என்று கூறிய அவர், எவ்வாறாயினும், கருணா வெளியிட்டுள்ள கருத்தை கண்டிப்பதாக கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .